பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அப் பகுதியில் உள்ள பைனஸ் வனப்பகுதியிலேயே இத் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.