புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் வாகனம் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று (14) காலை விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் கொஸ்வத்த, ஹல்ததுவன பகதியில் பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
விபத்தில், படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரே ஓட்டிச் சென்றதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, விபத்தின் போது வாகனத்தை ஓட்டிச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பைசலின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.