பொதுவாகவே காதலர் தினம் என்பது பிங்க் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களுடன் தொடர்பு கொண்டது. அதேசமயம், உங்கள் அன்பை வெளிப்படுத்தக் கூடிய வேறுசில வண்ணங்களும் உள்ளன.
தன் காதலன் அல்லது காதலி மீது நாம் கொண்டிருக்கும் அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதற்கு மிக முக்கியமான நாளாக காதலர் தினம் விளங்குகிறது. மிக செலவு மிகுந்த கொண்டாட்டத்தை நீங்கள் நடத்தினாலும் சரி, அல்லது சாதாரண முறையில் கொண்டாடினாலும் சரி, அவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் உடைகளின் நிறங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. உடைகளின் நிறத்தை வைத்தே உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும்.
பொதுவாகவே காதலர் தினம் என்பது பிங்க் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களுடன் தொடர்பு கொண்டது. அதேசமயம், உங்கள் அன்பை வெளிப்படுத்தக் கூடிய வேறுசில வண்ணங்களும் உள்ளன. காதலன் அல்லது காதலி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு, கருணை, தூய்மையான காதல் மற்றும் மோகம் போன்றவற்றை வெளிப்படுத்தக் கூடியதாக நிறங்கள் அமைகின்றன.
ரோஸ் கோல்டு: இருப்பதிலேயே மிக அற்புதமான நிறம் இது. இந்த ஆண்டு பிங்க் நிறத்திற்குப் பதிலாக ரோஸ் கோல்டு நிறத்தை காதலர் தினத்தன்று நீங்கள் பயன்படுத்தலாம். உடைகள் தான் இந்த வண்ணத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. நாம் அணியும் ஆபரணங்கள் அல்லது பிளவுஸ் போன்றவை கூட இந்த நிறத்தில் இருக்கலாம். உலகெங்கிலும் உள்ள ஸ்டைலான பெண்கள் ரோஸ் கோல்டு நிறத்தை தேர்வு செய்கின்றனர்.
மோனோகுரோம்: ஒவ்வொரு நபருக்குமே வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகள் பொருத்தமாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகள் அனைத்துமே மிக ஸ்டைலாக இருக்கும். காதலர் தினத்தில் உங்கள் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தக் கூடிய வண்ணத்தில், கருப்பு முதல் இடத்தைப் பெறாது என்றாலும் கூட, ஒரு சிறப்பு மிகுந்த நாளில், உணர்ச்சிகளை தூண்டக் கூடிய நல்ல நிறமாக அது இருக்கும். முழுவதுமாக கருப்பு நிற ஆடை அல்லது கருப்பும், வெள்ளையும் கலந்த ஆடை என்பது உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும்.
பர்கண்டி: காதலர் தினத்தில் பாரம்பரியமாக அணியப்படும் சிவப்பு நிறத்தின் மற்றொரு உருவம் தான் பர்கண்டி. இது ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாக, ஸ்டைலானதாக இருக்கும். உங்களுக்குள் உள்ள பெண்மையை, அதன் வலிமையை வெளிப்படுத்துவதாக இந்த நிறம் அமையும். அதேசமயம், பர்கண்டி நிறத்துக்கு மேட்ச் ஆன வெல்வெட் நிற அணிகலன்களை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
மௌவே: இருப்பதில் நல்ல ரொமாண்டிக் நிறம் என்றால் அது மௌவே ஆகும். இந்த நிற ஆடைகளை நீங்கள் அணியும் போது, அது மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக தோற்றம் அளிக்கும். இதற்கு மேட்ச் ஆக கருப்பு, மஞ்சள், ஹாட் பிங்க், பிரைட் ப்ளூ போன்ற அணிகலன்களை நீங்கள் அணியலாம்.
ஆப்ரிகாட்: மிகவும் அறியப்படாத நிறங்களில் ஒன்று ஆப்ரிகாட் ஆகும். ஆனால், நல்ல தோற்றத்தையும், குதூகலத்தையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தூய்மையான அன்பை வெளிப்படுத்தும். நல்ல ராயல் லுக் தரக் கூடிய இந்த நிற ஆடைகள் உங்கள் காதலர் தின கொண்டாட்டத்துக்கு சரியான சாய்ஸ் ஆக அமையும்.