மகளிர் பிரிமீயர் லீக் T20 கிரிக்கெட் போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் மகளிர் பிரிமீயர் லீக் t20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று ஆரம்பமாகியது.
இன்னிலையில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி வதோதராவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.