கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைணக்களம் தெரிவித்துள்ளது.