பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அமைப்பு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் கெயிரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அதனை கடைபிடிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி இஸ்ரேலிய ரஸ்யரான தாஷா ட்ருபுனோ, இஸ்ரேலிய அமெரிக்கரான சாகுள் ஜெகல்ஜேன் மற்றும் இஸ்ரேலிய ஆர்ஜன்டினரான யார் ஹான் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் .
காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளின் புதிய முன்மொழிவுகளை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். காசாவைவிட்டு பாலஸ்தீனர்கள் நிரந்தரமாக வெளியேறி வேறு இடங்களில் குடியேற வேண்டும் என்ற அமரிக்க அதிபர் ட்ரம்பின் முன்மொழிவுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஸ்ய அதிபர் புட்டினுடன் நேரடியாக பேசியுள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உக்ரைனை தவிர்க்ககூடாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் உக்ரைனின் கூட்டணி நாடுகளும் எச்சரித்துள்ளன.
அமைதியை விரும்புவதாக கூறும் அதிபர் புட்டினை உலக நாடுகள் நம்பிவிடக்கூடாது என்று எச்சரித்த உக்ரைன் அதிபர் வொலடிமிர் செலன்ஸ்கி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வொன்ஸை சந்தித்தபோது உக்ரைன் மக்களை அமெரிக்கா கைவிட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தினார். மூன்று ஆண்டுகளாக நடந்துவரும் ரஸ்ய படையெடுப்புகளை நிறுத்துவதற்கான அதிபர் ட்ரம்பின் திடீர் அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி நாடுகளும் கவலை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ரஸ்யா நடத்திய தாக்கதலால் செர்னோபில் விமான நிலையத்தின் கதிரியக்க பாதுகாப்பு கணிசமாக சேதமடைந்தள்ளதாக யுக்ரைன் கூறியுள்ளது. கதிரியக்க பாதகாப்பு பகுதியை ட்ரோன் தாக்கியதாகக் கூறியுள்ள அதிபர் செலன்ஸ்கி அப்போது ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். கதிரியக்க அளவு அதிகரிக்கவில்லை என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
1986ஆம் ஆண்டு உலகின் மிக மோசமான அணு விபத்து நடந்தபோது சுமார் 30பேர் கொல்லப்பட்டதுடன் பலர் பாதிக்கப்பட்ட்டமை குறிப்பிடாதக்கது. உக்ரைனின் எதிர்காலம் குறித்து வாதிக்க உக்ரைன் அதிபர் வொலடிமர் செலஸ்கி அமெரிக்க அதிகாரிகளை மியுனிக்கில் சந்தித்தார். உக்ரைன் மீதான ரஸ்ய போர் குறித்து விலாடிமிர் புட்டினுடன் ட்ரம்ப் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார். ரஸ்ய படையெடுப்பால் நாடு முழுவதும் நகரங்கள் அழிக்கப்பட்டு பலரது வாழ்க்கை சீர்குழைந்துள்ளது. முக்கியமான அணை அழிக்கப்பட்டநிலையில் சாப்ருஸ்யாவின் தெற்கே உள்ள நீர்தேக்கம் இப்போது வறண்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.