ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கிடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அண்மைய வரலாற்றில் மிகவும் பின்தங்கிய யுகத்தினை கொண்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் காணப்படுவதாவும் நாட்டின் நிலையறிந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தற்போது வரிசையாக வெளியேறிவருவதாகவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். மேலும், வலுவான நிர்வாகம் ஒன்று இல்லை எனவும், அண்மைய வரலாற்றில் மிகவும் இருண்ட யுகத்தினை கொண்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் அடையாளப்படுத்தப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டில் இருந்து வெளியேறிவருவதாவும் எனவே தற்போது நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளவர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும், நாம் 2028 ஆம் ஆண்டில் இருந்து கடன் செலுத்த வேண்டும் எனவும், உயர்மட்டத்திலான பொருளாதார வளர்ச்சி நிலை காணப்பட வேண்டும் என எதிர் கட்சி தலைவர் கூறியிருந்தார்.
அரசாங்கத்தினால் தற்போது அரச வருமானத்தினையோ அல்லது பொருளாதார வளர்ச்சி இலக்கினையோ அடைய முடியாத பல விடயங்களை உள்ளதாக கலந்துரையாடப்பட்டிருந்தது.சர்