மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.
தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மகன் எல்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.