கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஜனவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 ஜனவரியில் 59.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து.
இது தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது.
இம்மேம்பாட்டிற்கு அனைத்துச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.
அடுத்த மூன்று மாதங்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்கான கண்ணோட்டம் நேர்மறையானதாக உள்ளது, மேம்பட்ட வணிக நிலைமைகளை எதிர்பார்ப்பதாகவும் CBSL குறிப்பிட்டுள்ளது.