காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது.
தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது.
அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபிர் 10 மாதங்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மீதமுள்ள பணயக்கைதிகளுடன் அவரது உடலையும் இஸ்ரேல் திரும்பக் கோரியது.
வியாழன் அன்று ஹமாஸால் இஸ்ரேலுக்குக் அவர்களில் உடல்களை திருப்பிய அனுப்பிய பின்னர் ஷிரி பிபாஸின் இரு மகன்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஷிரியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.
ஆனால், அவர்களின் தாயார் ஷிரி என்று கூறப்படும் மூன்றாவது உடல் எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை மற்றும் அடையாளம் காணப்படவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
அபு கபீர் தடயவியல் நிறுவனத்தில் உள்ள நிபுணர்களால் நான்காவது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை (21) அதிகாலை அறிவித்தது.
இது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஒப்பந்த மீறல் ஆகும் என ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப ஒப்பந்தத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளகவும் கூறியது.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து, இஸ்ரேல் முழுவதும் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்கனவே தூண்டியிருந்த நிலையில், உடல்கள் திரும்பப் பெற்ற பின்னர் அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை வந்தது.
எனினும், ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.