இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் புறநகர்ப் பகுதிகளான பேட் யாம் மற்றும் ஹோலோனில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் மூன்று காலி பஸ்கள் வியாழக்கிழமை (20) இரவு அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், இரண்டு பஸ்களிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புகள் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
காசாவில் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பியனுப்பியதையடுத்து இஸ்ரேல் ஏற்கனவே துக்கத்தில் இருந்த ஒரு நாளில் வெடிப்புகள் நடந்தன.
பஸ் வெடிப்புகள் 2000 களில் பாலஸ்தீனிய எழுச்சியின் போது குண்டுவெடிப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில், வெடிகுண்டு சப்பர்கள் அருகில் சந்தேகத்திற்குரிய வேறு ஏதேனும் பொருட்களை தேடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், நிலைமை குறித்து தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெற்று வருவதாகவும் வியாழன் இரவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியதாகவும் கூறியது.
இதையடுத்து, பயங்கரவாத மையங்களுக்கு எதிராக மேற்குக் கரையில் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு அவர் பிரதமர் அறிவுறுத்தியதாக அறிவித்தது.