சிவபெருமானுக்கு உரிய நாளாக திகழக்கூடிய மகா சிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள்.
பொதுவாகவே மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜையின் நடைபெறும்.
பலரும் அன்றைய நாளில் விரதம் இருந்து மதியம் உறங்காமல் மாலை 6:00 மணிக்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள்.
அப்படி கண்விழித்து சிவபெருமானை நான்கு கால பூஜையிலும் வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.
விரதம் இருக்க முடியாத சூழ்நிலையில் இருக்கக்கூடிய வயதானவர்களாக இருந்தாலும் சரி, அவர்களால் ஆலயத்திற்கு சென்று கண்விழித்து வழிபாடு செய்ய இயலாது.
அப்படிப்பட்டவர்கள் மனவருத்தப்படாமல் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் அன்றைய நாளில் கூறுவதன் மூலம் சிவராத்திரியின் முழு பலனையும் பெற முடியும்.
ஒரு சில பெண்களுக்கு சிவராத்திரி சமயத்தில் கோவிலுக்கு செல்ல இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களும் இந்த வழிபாட்டை பின்பற்றலாம்.
இந்த வழிபாட்டை நாம் சிவராத்திரி அன்று மாலை 4 மணிக்கு மேல் இரவு ஒரு மணிக்குள் நமக்கு எந்த நேரத்தில் நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.
பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் எந்த திசையை பார்த்துக் கொண்டு வேண்டுமானாலும் சிவபெருமானுக்குரிய இந்த அற்புதமான மந்திரத்தை நாம் கூறலாம்.
இந்த மந்திரத்தை குறைந்தது 20 நிமிடத்தில் இருந்தால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம்.
நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டிய ஒரு நான்கெழுத்து மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. இந்த மந்திரத்தை கூறும்பொழுது முழுக்க முழுக்க சிவபெருமானை நினைத்துக் கொண்டே கூற வேண்டும்.
மேலும் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமான் நம்முடனே இருந்து நமக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் தர வேண்டும் என்று நேர்மறையான வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.
மந்திரம் “மவ சிவ”
இந்த நாளெழுத்து மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு சிவராத்திரி அன்று யாரொருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சிவராத்திரி இருந்ததற்குரிய பலனையும் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.