செவ்வாய் கிரகம் ஒரு பழங்காலப் பெருங்கடலை கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வினை மேற்கொள்ளும் சீனாவின் Zhurong ரோவரின் தரவு, கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்துள்ள கடற்கரைப் படிவுகளை வெளிப்படுத்துகிறது என்று ‘Proceedings of the National Academy of Sciences (PNAS)’ தெரிவித்துள்ளது.
இது ஒரு காலத்தில் சிவப்பு கிரக வடிவமைப்பில் நீர் முக்கிய பங்கு வகித்தது என்ற கருதுகோளை வலுப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1970 ஆம் ஆண்டுகளில் நாசாவின் மரைனர் 9 ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தில் நீர் செதுக்கப்பட்ட நிலப்பரப்புகளின் படங்களை கைப்பற்றியிருந்தது.
அன்றிலிருந்து விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நீரின் செல்வாக்கு தொடர்பான ஆய்வுகளை விரைவுபடுத்தினர்.
செவ்வாய் கிரகத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருந்ததாகவும், இன்றும் மேற்பரப்பிற்கு அடியில் பனிக்கட்டிகள் இருப்பதாகவும் அண்மைய ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.
சீனாவில் உள்ள குவாங்சூ பல்கலைக்கழகத்தின் ஜியான்ஹுய் லி தலைமையிலான ஆய்வுக் குழு, அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து, பண்டைய செவ்வாய்க் கடல் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது.
புராணக் கடவுளான நெருப்பின் பெயரால் பெயரிடப்பட்ட, Zhurong ரோவர் 2020 இல் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் ஏவப்பட்டதுடன் 2021 முதல் 2022 வரை இயக்கப்பட்டது.
இது 3,300 கிமீ விட்டம் கொண்ட ஒரு பெரிய தாக்கப் படுக்கையான செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா பிளானிஷியாவில் தரையிறங்கியது.
இந்த பகுதியில் ஒரு காலத்தில் பெரிய நீர்நிலை இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Zhurong ரேவர் பழங்காலக் கரையோரமாக கருதப்படும் கிரகத்தின் முகடுகளுக்கு அருகில் உள்ள ஒரு பகுதியை ஆய்வு செய்தது.
தரையில் ஊடுருவக்கூடிய ரேடாரைப் பயன்படுத்தி, ரோவர் மேற்பரப்புக்கு அடியில் 100 மீட்டர் ஸ்கேன் செய்து, குறைந்தபட்சம் 30 மீட்டர் ஆழத்திற்கு விரிவடையும் தொடர்ச்சியான பிரதிபலிப்பு அடுக்குகளைக் கண்டறிந்தது.
புதைக்கப்பட்ட கட்டமைப்புகள் பூமியில் உள்ள கடலோர வண்டல்களை நெருக்கமாக ஒத்திருப்பதை ஆய்வின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
அவை ஒரு பழங்கால கடலின் ஓரங்களில் உருவானதாகக் கூறுகின்றன.
அதேநரேம், எரிமலை செயல்பாடு, காற்றினால் வீசப்படும் மணல் திட்டுகள் அல்லது நதி படிவுகள் போன்ற மாற்று விளக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் நிராகரித்தனர்.