சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann) சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற பந்துவீச்சு சோதனையில் அவரது பந்துவீச்சு சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சோதனையில் அவரது முழங்கை 15 டிகிரி வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு பாணியில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் மேத்யூ குஹ்னெமன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.