உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான சாலையும் மூடப்பட்டுள்ளது.
சாமோலியின் மானா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிக்கியவர்கள் கட்டிட தொழிலாளர்கள் ஆவர்.
மீட்பு பணிகளில் இந்தோ திபெத்திய எல்லைக் பொலிஸாரும், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், மாநில பேரிடர் மீட்புப் படையும், தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்குச் செல்லவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் 57 பேர் பனியின் கீழ் சிக்கியிருப்பதை சாமோலி அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சந்தீப் திவாரி உறுதிப்படுத்தினார்.
அதேநேரம் இவர்களில் 10 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மானா அருகே உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.