லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான ஜானிக் சின்னரின் (Jannik Sinner) பரிந்துரை மூன்று மாத ஊக்கமருந்து தடை விதிக்கப்பட்ட பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
உலகின் நம்பர் ஒன் வீரரான இவர், கடந்த ஆண்டு தனது இரண்டு நேர்மறை ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புடன் ஒரு தீர்வை எட்டினார்.
இதனால், இந்த மாத தொடக்கத்தில் டென்னிஸில் இருந்து உடனடியாக மூன்று மாத தடையை அவர் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய ஓபனை வென்ற 23 வயதான இத்தாலிய வீரர், பெப்ரவரி 9 முதல் மே 4 வரை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட லாரஸ் உலக விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரையாளர்கள் மார்ச் 3 அன்று அறிவிக்கப்படுவார்கள்.