மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் (Mannheim) நகரில், பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 83 வயது பெண் ஒருவரும் 54 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஜெர்மனிய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதான ஜெர்மன் நபரை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளில் அவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்று கண்டறியப்படவில்லை.
எனினும், “மனநோய்க்கான உறுதியான அறிகுறிகளைக்” கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (03) ஜெர்மனிய நேரப்படி பிறப்கல் 12:15 மணிக்கு (GMT 11:15 மணிக்கு) நடந்ததாக மன்ஹெய்ம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனி முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய வெளிப்புற திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மன்ஹெய்ம் நகர மையத்தில் அணிவகுப்பு நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் பின்னணியில், தற்போது ஒரு சந்தை மூடப்பட்டுள்ளது, மேலும் நகர மையத்தில் ஒரு தெரு திருவிழா நடைபெறாது. அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளான ஃபியூடன்ஹெய்ம், நெக்கராவ் மற்றும் சாண்ட்ஹோஃபென் ஆகிய இடங்களில் திருவிழா நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் ஜெர்மனி பல வன்முறைத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது, இதில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.