நிமோனியாவால் வைத்தியசாலையில் சுமார் மூன்று வாரங்கள் போராடி வரும் போப் பிரான்சிஸ், தான் குணமடைய பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஆடியோ செய்தியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த குரல் பதிவில் அவர்,
சதுக்கத்திலிருந்து என் உடல்நலத்திற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு என் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இங்கிருந்து உங்களுடன் இணைகிறேன் – என்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் பிரான்சிஸ் கூறினார்.
மேலும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, கன்னிகை உங்களைப் பாதுகாக்கட்டும். நன்றி – என்று அவர் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசும்போது மூச்சு விட சிரமப்பட்டார்.
இதன்போது, சில வார்த்தைகளில் வெளியில் விடவும் அவர் அவதிப்பட்டார்.
88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உலகம் அவரது குரலைக் கேட்பது இதுவே முதல் முறை.
போப்பின் உடல் நலவுக்காக பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு மாலையும் புனித பீட்டர் சதுக்கத்தில் அவரது நலன் விரும்பிகள் கூடி வருகின்றனர்.
வியாழக்கிழமை (06) அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அவரது செய்தியைக் கேட்டதும் கைதட்டினர்.
2013 முதல் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருக்கும் ஆர்ஜென்டீனியர் “நிலையான” நிலையில் இருப்பதாக வத்திக்கான் வியாழக்கிழமை முன்னதாகக் கூறியது.