இந்தியாவில் ‘மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களின்‘ விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த பெப்ரவரி மாதத்தில் 8,968 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச் சந்தயில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தோட ஒப்பிடுகையில் இது 18.95 சதவீதம் அதிகம் எனவும், அப்போது மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை 7,539-ஆக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெப்ரவரி மாதத்தில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும், அம் மாதத்தில் 3,825 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், 3,270 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இப் பிரிவில் எம்ஜி மோட்டாா் இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 3 சதவீதத்தை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.