உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் கட்டார் எயார் வேஸ் விமானமூடாக இன்று காலை 8.24 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசைதரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளினால் விசேட வரவேற்பளிக்கப்பட்டது.

அமெரிக்க அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான அலோ பிளக் இலங்கையில் சுகாதாரத்துறையில் முதலீட்டு திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழினுட்பத்திற்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்
இந்த விஜயத்தின் போது அலோ பிளக் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















