2025 மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத மலை யாத்திரை பருவத்துடன் இணைந்து ஒரு சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கும் சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பு இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
01. சிறப்பு ரயில் 01 – கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளைக்கு – மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 07.30 மணிக்கு ரயில் புறப்படும்.
02. சிறப்பு ரயில் 02 – பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு – மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பதுளையில் இருந்து மாலை 05.20 மணிக்கு ரயில் புறப்படும்.
03. சிறப்பு ரயில் 03 – கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை – மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை அன்றாடம் காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ரயில் புறப்படும்.
04. சிறப்பு ரயில் 04 – காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு, கோட்டை – மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை அன்றாடம் பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ரயில் புறப்படும்.