அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில் சனிக்கிழமை இரவு வரை 250,000 க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன.
கிழக்கு லூசியானா, மேற்கு ஜோர்ஜியா, மத்திய டென்னசி மற்றும் மேற்கு புளோரிடா பன்ஹேண்டில் முழுவதும் சூறாவளி எச்சரிக்கை வெளியிடப்படுள்ளதால், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு முழுவதும் கடுமையான வானிலை தொடர்ந்து நிலவி வருவதால், மத்திய மிசிசிப்பி, கிழக்கு லூசியானா மற்றும் மேற்கு டென்னசி ஆகிய இடங்களிலும்; அலபாமா மற்றும் ஆர்கன்சாஸின் சில பகுதிகளிலும் திடீர் வெள்ளம் மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு அலபாமா முழுவதும் பல சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மிசோரியின் அவசரகால மேலாண்மை நிறுவனம், இதுவரை 25 மாவட்டங்களில் 19ஐ சூறாவளிகளைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
மிசோரியில் உயிரிழந்த 12 பேரில் ஒருவரின் வீடு ஒரு சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளதுடன், அனர்த்தம் காரணமாக பல வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.