வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இசை நிகழ்வின் போது வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.