கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ஒளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கமூடான ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.