2023 ஆம் ஆண்டு வெலிகமவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொறுப்பதிகாரி மற்றும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரை சட்டமா அதிபருக்கும் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்குப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் 06 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.