ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தவிசாளர் பதவியிலிருந்து விலகினாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.