வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இன்றைய தினம் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சற்று முன்னர் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் , சற்று நேரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதோடு, இதற்கு எதிர்கட்சிகள் எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.