பங்களாதேஷ கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பாலுக்கு (Tamim Iqbal) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.
தற்போது அவர் டாக்காவின் புறநகர் பகுதியான சவாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவாரில் உள்ள முகமதியன் ஸ்போர்டிங் கழகம் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கழகம் இடையேயான டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் தமீம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவரை டாக்காவிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் அவரை மைதானத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து இயலாமல் போக, பின்னர் அவர் சிகிச்சைக்காக ஃபாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரை BKSP மைதானத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னர் சிகிச்சைக்காக தமீம் ஃபாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு ஆரம்ப பரிசோதனைகள் செய்யப்பட்டன, அங்கு லேசான இதய பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
அவரை டாக்காவிற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அங்கு செல்லும் வழியில், அவருக்கு கடுமையான மார்பு வலி ஏற்பட்டது.
மேலும், அவர் அவசரமாகத் திரும்ப வேண்டியிருந்தது.
மருத்துவ அறிக்கைகளின் பின்னர் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டது.