இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.