அமைதி காக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தின் போது ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை (24) பதிலடி கொடுத்தது.
மேலும், அண்டை நாடு “சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள” பிராந்தியத்தின் சில பகுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் பர்வதனேனி ஹரிஷ்,
ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை ‘தேவையற்றது’ என்று நிராகரித்தார்.
மேலும் அந்தப் பகுதி “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும்” என்று உறுதியாக வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிணைந்த பிரதேசம் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்திருப்பதை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுபோன்ற தொடர்ச்சியான குறிப்புகள் அவர்களின் சட்டவிரோத கூற்றுக்களை உறுதிப்படுத்தவோ அல்லது அரசு ஆதரவுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவோ முடியாது என்று ஹரிஷ் இதன்போது கூறினார்.
ஐ.நா. அமைதி காக்கும் பணியின் எதிர்காலம் குறித்த பாதுகாப்பு கூட்டத்தின் விவாதத்தின் போது, பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பாதெமி ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, ஹரிஷ் பதிலடி கொடுத்தார்.
கடந்த வாரம் கூட, ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHR) கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.