பேராதனை, எடதுவா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (30) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டி விளையாட்டு மைதானத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் போயகம, ஹெந்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 53 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது வாகனத்தில் சாரதி உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பேராதனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.