ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற பகுதியிலேயே நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பழமையான மரமொன்றே இவ்வாறு வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்லு, மண்டி உள்ளிட்ட இடங்களில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.