ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று நேற்று திடீரென பற்றியெரிந்த சம்பவம், ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த கார் மொஸ்கோ வீதியில் திடீரென பற்றி எரிந்தது. இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக் கார் ரஷ்ய உளவுத்துறையின் தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென வெடித்துத் தீப்பிடித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாமைத்துவ துறைக்குச் சொந்தமானது காரே இவ்வாறு தீப்பற்றி எரிந்தது.
இருப்பினும், குறித்த கார் பற்றியெரிந்தமைக்கான காரணம் தற்போதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கொல்வதற்கான சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் பரவலாக எழுப்பபட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக ரஸ்ய அரசாங்கம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.