தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 2) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் பிரேரணை தொடர்பான கவலைகள் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த விவகாரம் பல கவலைகளை எழுப்புகிறது என்றார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நிலையியற் கட்டளைகளின் கீழ் சில வரம்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் பிரேரணையைத் தொடர விரும்புவதாகக் கூறினார்.