பீரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளின் மற்றுமொரு முக்கியமான போட்டி இன்று மென்சிட்டி மற்றும் லெய்சர் சிட்டி ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ள லெய்சர்சிட்டி அணிக்கு மென்சிட்டி அணியுடனான போட்டி சவாலானதாகவே அமைந்தது. போட்டி தொடங்கி இரண்டாவது நிமிடமே மென்செஸ்டர் சிட்டி அணியின் ஜேக் கிரேல்லிஸ் மென்சிட்டி அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
பின்னரும் மென் சிட்டி அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது.
29வது நிமிடத்தில் மீண்டும் மென் சிட்டி அணியின் ஒமர் மார்கவுஸ் தனது பங்கிற்கு ஒரு கோலினை பதிவு செய்து 2-0 என மென்சிட்டி அணியை முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க லெய்ஸ்டர் சிட்டி அணி பல முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.
இறுதியில் இலகுவான வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது மென்செஸ்டர் சிட்டி அணி.