ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர் பூசா பகுதியில் நடத்திய சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, துப்பாக்கியுடன் ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரத்கம பகுதியில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
இதன் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பிஸ்டல், ஒரு மெகசின் மற்றும் 9 மிமீ தோட்டாவுடன் ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர்களை இன்று (03) காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.