யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பாரஸ்ட் ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்ட விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணமோசடி வழக்கு மற்றும் 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு இவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் விசாரணையில் யோஷித ராஜபக்ஷ நிதி தொடர்பாக திருப்திகரமான விளக்கத்தை அளிக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.