காசா மீது நேற்றிரவு இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய தாக்குதலில் கர்ப்பிணி பெண், மற்றும் குழந்தைகள் உட்பட 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா முனையில் அதிகமான இடங்களை கைப்பற்றி அதனை பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே காசா முனையில் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் நேற்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு காசா முனையின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஐந்து குழந்தைகள், நான்கு பெண்கள் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹமாஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசா முனை முழுவதும் புதிய பாதுகாப்பு பகுதியை இஸ்ரேல் உருவாக்கப்போவதாகவும் எனவே ரஃபா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.