அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (04) வெளியாகவுள்ளது.
இந்த தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது சமூக ஊடகங்களில் உறுதிபடுத்தியுள்ளது.
மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படம், அஜித் குமார் நடித்த பல்வேறு தோற்றங்கள், அதிரடி காட்சிகள் மற்றும் துள்ளலான இசையுடன் ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AK-வின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால், அஜித் குமார் ரசிகர்கள் அவரிடமிருந்து அதிக எதிர்பார்ப்பை எதிர் நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில், படத்திற்கான முன்பதிவு இன்று இரவு 8:02 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குட் பேட் அக்லி படத்தில் AK வேடத்தில் அஜித் குமார் நடிக்கிறார், அவருடன் த்ரிஷா கிருஷ்ணனும் ரம்யாவாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ மற்றும் ரகு ராம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10 ஆம் திகதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.