இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தில் பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது யூனுஸுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு சந்திப்பை வங்கதேசம் நாடியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அமர்வதற்கு முன்பு இரு தலைவர்களும் உறுதியான கைகுலுக்கலை மேற்கொண்டதை காட்டும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சந்திப்பில் பிம்ஸ்டெக் தலைவர்களின் இரவு விருந்தில் மோடியும் யூனுஸும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

















