நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் அன்று (28) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை மருதானை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது