ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதன்போது நாணய சுழங்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ஓட்டங்களைக் குவித்தது. இதையடுத்து,204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 19 ஆவது ஓவரில் மும்பை வீரர் திலக் வர்மா வர்மா உபாதை காரணமாக ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
19வது ஓவரில் 7 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடித்திருந்த திலக் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியில் அஸ்வினும் பஞ்சாப் அணியில் அதர்வா டைடேவும் குஜராத் அணியில் சாய் சுதர்சனும் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.