இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் இறுதி நாளான இன்று, சற்று நேரத்திற்கு முன்பாக அனுராதபுரத்தை சென்றடைந்துள்ளார்.
இந்தியப் பிரதமருடனான இந்த பயணத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இரு தலைவர்களும் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் அவர்கள் திறந்து வைப்பார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுலில் உள்ளது.