2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களுரு அணியானது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
18 ஆவது ஐ.பி.எல். சீசனின் நான்கு போட்டிகளில் RCB இன் மூன்றாவது இது வெற்றியாகும்.
இதன் மூலம் அவர்களின் புள்ளி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு சற்று கீழே அவர்கள் உள்ளனர்.
அவர்கள் ஆறு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நிகர ஓட்ட விகிதத்தை சிறப்பாகக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான MI அணி ஐந்து ஆட்டங்களில் நான்காவது தோல்வியைச் சந்தித்து.
தற்சமயம் அவர் 10 அணிகள் கொண்ட பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளதுனர்.
நேற்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 222 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, இறுதி ஓவர் வரை ஆட்டத்தில் நீடித்தது.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆனால், குருணால் பாண்டியா அதிரடியான பந்து வீச்சினால் மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர் மற்றும் நமன் திர் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி RCB அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
குருணால் பாண்டியா 4 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 45 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சேஸிங்கில் மும்பை அணியை திலக் வர்மா (56) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (42) ஆகியோர் மீட்டனர்.
அவர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்களை அதிரடியாக சேர்த்தனர்.
அதேநேரம், போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணியானது வலுவான தொடக்கத் கொண்டிருந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிலிப் சால்ட் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினாலும், விராட் கோலி மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் அணியை நிலையான நிலைக்கு கொண்டு வந்தனர்.
விராட் கோலி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களை எடுத்தார், படிக்கல் 22 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதர் 32 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்ததற்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் அதிரடியாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.