மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர்-நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘L2: எம்புரான்’ திரைப்படம் இதுவரை வெளியான மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தப் படம் வெறும் ஒன்பது நாட்களில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் வசூலை முறியடித்தது.
2024 பெப்ரவரி மாதம் வெளியான இயக்குனர் சிதம்பரத்தின் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் மொத்தமாக 241 கோடி இந்திய ரூபா வசூலித்தது.
இந்த நிலையில் ‘எம்புரான்’ உலகம் முழுவதும் தற்சமயம் 250 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து.
இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மோகன்லால் மற்றும் பிருத்விராஜைத் தவிர, ‘எம்பூரான்’ படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், ஜெரோம் ஃப்ளின், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.