சீதுவை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சீதுவ, 18 ஆவது மைல் கம்பம் பகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் ஒரு தொழிலாதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்சமயம் அவர் ஆபத்தான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














