2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (10) நடைபெறும் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகும்.
இரு அணிகளும் தங்கள் முந்தைய போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற நிலையில் இன்று களம் காணுகின்றன.
மேலும் இந்த அற்புதமான மோதலில் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர இலக்கு வைத்துள்ளன.
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்த்து RCB அணி ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றது.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மும்பை அணிக்கு எதிரான அவர்களின் சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றியாக இது அமைந்தது.
துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றில் அணியின் செயல்திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
மறுபுறம், டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
இதுவரை போட்டிகளில் தோற்கடிக்கப்படாத சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டிசி அணி, கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வியத்தகு வெற்றியைப் பெற்றதன் மூலம், தங்கள் வெற்றிப் பயணத்தை நீட்டிக்க முயற்சிக்கும்.
ஒட்டுமொத்த ஐ.பி.எல். வரலாற்றிலும் இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன.
அதில் RCB 19 வெற்றிகளையும், DC வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.
ஒரு போட்டி எந்தவித முடிவும் இன்றி கைவிடப்பட்டுள்ளது.