கழக மட்ட போட்டிகளின் முக்கியமான தொடராக கருதப்படும் UEFA CHAMPIONS LEAGUE தொடரின் காலிறுதிப்போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன் அடிப்படையில் முதல் காலிறுதிப் போட்டி பயன்முனிக் மற்றும் இண்டர் மிலான் அணிகளுக்கிடையில். இடம்பெற்றது. 1ST LEG போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமுதலே இரு அணிகளும் தீவிரமாக களமிறங்கின.
அதன் பயனாக போட்டியின் 38வது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லவ்டாரோ மார்ட்டினஸ் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
முதல் பாதி முடிவடைய இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் பயன் முனிக் அணி போட்டியை சமப்படுத்த கடுமையாக பாடுபட்டது. மாறி மாறி இரு அணிகளும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் 85வது நிமிடத்தில் அதற்கு பலன் கிட்டியது.
பயன்முனிக் அணியின் தோமஸ் முல்லர் அட்டகாசமான கோல் ஒன்றினை பதிவு செய்து 1-1 என போட்டியை சமப்படுத்தி அசத்தினார். இருந்தும் சுதாகரித்துக்கொண்ட இன்டர் மிலான் அணி 88வது நிமிடத்தில் டாவிட் ப்ரெட்டசியின் உதவியுடன் 2-1 என முன்னிலைப்பெற்றது.
போட்டி முடிய 2 நிமிடமே எஞ்சியிறுந்த நிலையில் பயன்முனிக் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைய 2-1 என இன்டர் மிலான் அணி முதல் காலிறுதி ஆட்டத்தை வெற்றிக்கொண்டு போட்டியில் முன்னிலைப்பெற்றது.