கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று அதிகாலை 2:30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஒரு மோட்டார் சைக்கிள் அருகே சந்தேகத்திற்கிடமான நபர் காத்திருந்ததை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து ஒரு பொலிஸ் அதிகாரி அவரிடம் சோதனை மேற்கொள்ள சென்ற போது, குறித்த நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனால், பொலிஸ் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.