ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது
அதன்படி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது
இதேவேளை 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளதால் எம்.எஸ்.தோனி தலைமையில் களமிறங்குகிறது
மேலும் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதுடன் கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது